அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி மீண்டும் சேர்ப்பு

எம்.ஜி. ஆர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து உடன் இருப்பவர் கேசி பழனிச்சாமி ஜெ மறைந்த பிறகு ஏற்பட்ட பிளவில் பன்னீச்செல்வம் அணியில் இருந்தவர் கேசி பழனிச்சாமி. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கே.சி.பழனிசாமி நிகழ்ச்சியில் பேசும் போது, ”ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய கேள்விக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுகவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும்” என்கிற தொனியில்
 

எம்.ஜி. ஆர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து உடன் இருப்பவர் கேசி பழனிச்சாமி ஜெ மறைந்த பிறகு ஏற்பட்ட பிளவில் பன்னீச்செல்வம் அணியில் இருந்தவர் கேசி பழனிச்சாமி.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி மீண்டும் சேர்ப்பு

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கே.சி.பழனிசாமி நிகழ்ச்சியில் பேசும் போது,  ”ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய கேள்விக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுகவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும்” என்கிற தொனியில் பதிலளித்திருந்தார்.


மத்திய அரசுக்கு எதிராக கீழ் மட்டத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் கட்சியின் மேலிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து முடிவெடுக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் கே.சி.பழனிசாமியின் கருத்து அதிமுகவை சங்கடத்துக்குள்ளாக்கியது. 


இந்நிலையில்,  கட்சியின் கொள்கைகள், குறிக்கோளுக்கும் முரண்பாடாக செயல்பட்டதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக  கடந்த வருடம் 2018 மார்ச் 16-ம் தேதி அன்று அக்கட்சியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து சில காலம் விலகி இருந்தார். 


பாராளுமன்ற தேர்தல் வருவதையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார்

From around the web