தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுக கூட்டணியே தேர்தலில் பெரும்பாலும் சந்தித்து வருகிறது. இடையில் ஒரு சில கூட்டணி அமைந்தாலும் அந்த கூட்டணி அந்த தேர்தலோடு காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது அதிமுக மற்றும் திமுக ஆகிய கூட்டணிக்கு இணையான வலுவான கூட்டணி இதுவரை தோன்றவில்லை என்பதை ஒவ்வொரு தேர்தலும் நிரூபித்து வருகிறது. இந்த நிலையில் திடீரென பாஜகவினர் தங்கள் கட்சியின் தலைமையில் தான் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமையும் என்று கூறி
 

தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுக கூட்டணியே தேர்தலில் பெரும்பாலும் சந்தித்து வருகிறது. இடையில் ஒரு சில கூட்டணி அமைந்தாலும் அந்த கூட்டணி அந்த தேர்தலோடு காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது

அதிமுக மற்றும் திமுக ஆகிய கூட்டணிக்கு இணையான வலுவான கூட்டணி இதுவரை தோன்றவில்லை என்பதை ஒவ்வொரு தேர்தலும் நிரூபித்து வருகிறது. இந்த நிலையில் திடீரென பாஜகவினர் தங்கள் கட்சியின் தலைமையில் தான் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமையும் என்று கூறி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

இதனை அடுத்து இதற்கு பதிலடி தரும் வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று அளித்த பேட்டியின் போது ’வழக்கம் போல அதிமுக தலைமையிலான கூட்டணி தான் அமையும் என்றும், அதுதான் வழக்கம் என்றும், இனியும் அதே நிலை தொடரும் என்றும் கூறியுள்ளார்

மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுக தலைமையில்தான் கூட்டணி வந்தது என்றும் இனிமேல் எந்த தேர்தல் வந்தாலும் அதில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்

பாஜகவிற்கு மறைமுகமாக முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web