தேசியக் கொடியை அவமதித்தாரா திமுக தலைவர்? அதிமுக பரபரப்பு புகார்

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேசிய கொடியை அவமதித்ததாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நேற்று முன்தினம் 73 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் தலைவர்கள் சுதந்திரக் கொடியை ஏற்றி சல்யூட் அடித்து மரியாதை செய்தனர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். ஆனால் கொடியை ஏற்றிய பின் அவர் அதற்கு வணக்கம் செலுத்தாமல் சென்றது
 
தேசியக் கொடியை அவமதித்தாரா திமுக தலைவர்? அதிமுக பரபரப்பு புகார்

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேசிய கொடியை அவமதித்ததாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று முன்தினம் 73 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் தலைவர்கள் சுதந்திரக் கொடியை ஏற்றி சல்யூட் அடித்து மரியாதை செய்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். ஆனால் கொடியை ஏற்றிய பின் அவர் அதற்கு வணக்கம் செலுத்தாமல் சென்றது தெரியவந்தது

இதுகுறித்து தொலைக்காட்சி செய்திகளில் வீடியோ ஆதாரத்துடன் வெளியானதும் இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகன் அவர்கள் புகார் ஒன்றை அளித்துள்ளார்

அந்த புகாரில் விதிமுறையை பின் வற்றாமல் தேசியக்கொடியை திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று அவமதிப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்திய பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேசியக்கொடி அவமதிப்பு சட்டத்தின் படியும் திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாபு முருகன் அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web