ஆன்லைனில் முடிந்தது பி.எட் கல்லூரி மாணவர்களின் சேர்க்கை!

ஆறு மாத காலத்திற்கு பின் பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது!
 
ஆன்லைனில் முடிந்தது பி.எட் கல்லூரி மாணவர்களின் சேர்க்கை!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் போன்றவைகள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. இதனால் பள்ளி மாணவர்கள் பரிட்சை எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக கூறபட்டனர். மேலும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்க்க மற்றவர்கள் ஒரு சில கல்லூரிகளில் தேர்ச்சி செய்யப்பட்டதாகவும் ஒரு சில கல்லூரிகளில் முந்தைய செமஸ்டர் மார்க் அடிப்படையில்  தேர்ச்சி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

B.Ed

மேலும் அரியர் மாணவர்கள் கடந்தாண்டு பரிட்சை எழுதாமலேயே பாஸ் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அரியர் மாணவர்களுக்கு 8 வாரத்திற்குள் நேரடியாகவோ அல்லது ஆன்லைனில்  தேர்வு வைக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் கட்டாயம் தேர்வு வைக்க வேண்டும்  என்றும் கூறியுள்ளது.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சில தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து தற்போது பிஎட்  படிப்பிற்கான சில தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதன்படி தற்போது பிஎட்  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி முடிந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா காரணமாக ஆறு மாத காலமாக தடை பின்னர் தற்போது மாணவர் சேர்க்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கல்வியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் புதிய மாணவர் சேர்க்கை நடத்த தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தடை விதித்திருந்தது. மேலும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து தடை நீக்கப்பட்டது. இதனால் ஏழு அரசு பிஎட் கல்லூரிகள் உட்பட 21 பிஎட் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

From around the web