சென்னை எழும்பூரில் இருந்து கூடுதலாக ரயில்கள் இயக்கம்: தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது 

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது 

மேலும் செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து நடைபெறும் என்றும் அதே போல் ரயில் பேருந்து ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து இன்று முதல் ரயில் போக்குவரத்திற்காக முன்பதிவுகள் தொடங்கப்பட்டு உள்ளன என்பதும் முன்பதிவு மையங்களில் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதால் தென் மாவட்ட பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை எழும்பூரில் இருந்து கூடுதலாக 6 ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதேபோல் சென்னையிலிருந்து கோவை, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மாவட்டங்களுக்கு இடையில் மட்டுமே போக்குவரத்து இருந்ததால் தென் மாவட்ட மக்கள் சென்னை வருவதற்கு சிக்கலாக இருந்தது. தற்போது அந்த சிக்கல் முழுவதும் நீக்கப்பட்டு செப்டம்பர் 7 முதல் முழு போக்குவரத்து தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web