பட்ஜெட் 2021: தமிழகத்திற்கு கூடுதல் சலுகைகள்: நிர்மலா சீதாராமன்

 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் தேர்தல் நடக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தந்துள்ளதாக தெரிகிறது

குறிப்பாக தமிழகத்தில் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்படும் என- நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில் மதுரை - கொல்லம் இடையே பொருளாதார சாலை திட்டம் தொடங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் நாடு முழுவதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 7,400 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பழைய வாகனங்கள் கழிக்க புதிய ஊக்குவிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதாவது 20 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனங்கள், 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட வர்த்தக வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

nirmala budget

அடுத்த 3 ஆண்டுகளில் 7 இடங்களில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35 ஆயிரம் கோடி செலவிடப்படும் என்றும் கொரோனா தடுப்பூசிக்காக தேவைப்பட்டால் கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும் என்றும்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் 11 ஆயிரம் சுகாதார மையங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும் என்றும், நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம் என்றும், நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

From around the web