அபின் கடத்தல் எதிரொலி: பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்

பாஜக பிரமுகர் அடைக்கலராஜ் என்பவர் இன்று காலை அபின் கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த அடைக்கலராஜ் என்பவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படையிலிருந்து நீக்கப்படுவதாக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார் இந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்ட
 

பாஜக பிரமுகர் அடைக்கலராஜ் என்பவர் இன்று காலை அபின் கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்

பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த அடைக்கலராஜ் என்பவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படையிலிருந்து நீக்கப்படுவதாக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்

இந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்ட அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் அவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். எனவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது. இவ்வாறு கரு.நாகராஜ் அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

முன்னதாக அடைக்கலராஜ் என்பவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அபின் கடத்தியதாக இன்று காலை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜக பிரமுகர் ஒருவரே அபின் கடத்தியதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அக்கட்சிக்கு களங்கம் விளைவித்ததையடுத்து தற்போது பாஜக தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அபின் கடத்தல் எதிரொலி: பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்

From around the web