ராமேஸ்வரத்தில் ஸ்ரீதேவி அஸ்தி இன்று கரைப்பு

கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் மரணம் அடைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் கடந்த புதன்கிழமை மும்பையில் தகனம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டதால் மும்பை நகரமே குலுங்கியது இந்த நிலையில் ஸ்ரீதேவியின் அஸ்தி இன்று ராமேஸ்வரத்தில் கரைக்கப்படவுள்ளது. இதற்காக ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் மகள்கள் ஜான்விகபூர், குஷிகபூர் ஆகியோர் நேற்று சென்னை வந்துள்ளனர். இன்று இவர்கள் மதுரைக்கு விமானம் மூலம் வந்து பின்னர் காரில் ராமேஸ்வரம் சென்று
 

கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் மரணம் அடைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் கடந்த புதன்கிழமை மும்பையில் தகனம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டதால் மும்பை நகரமே குலுங்கியது

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் அஸ்தி இன்று ராமேஸ்வரத்தில் கரைக்கப்படவுள்ளது. இதற்காக ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் மகள்கள் ஜான்விகபூர், குஷிகபூர் ஆகியோர் நேற்று சென்னை வந்துள்ளனர். இன்று இவர்கள் மதுரைக்கு விமானம் மூலம் வந்து பின்னர் காரில் ராமேஸ்வரம் சென்று அஸ்தியை கரைக்கவுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சிவகாசியை சேர்ந்த ஸ்ரீதேவி, பல ஆண்டுகளுக்கு முன் மும்பையில் செட்டில் ஆனாலும், அவரது அஸ்தி அவரது சொந்த மாநிலத்தில் கரைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web