கார் விபத்தை அடுத்து கைது செய்யப்பட்ட நடிகை குஷ்பு!

 

இன்று காலை சென்னையில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த குஷ்புவின் கார் திடீரென விபத்துக்குள்ளானது என்பதும் அந்த விபத்தில் நூலிழையில் பெரிய காயங்கள் இன்றி உயிர் பிழைத்தார் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் விபத்துக்கு பின்னர் மாற்று கார் மூலம் செங்கல்பட்டிலிருந்து கடலூர் சென்றடைந்த குஷ்பு அங்கு நடந்த வேல் யாத்திரையில் கலந்து கொண்டார். தமிழக பாஜக தலைவர் எல் முருகன் மற்றும் துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர்களும் இந்த வேல் யாத்திரையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 

kushboo

இந்த நிலையில் தடையை மீறி வேல் யாத்திரை செய்ததாக எல் முருகன், அண்ணாமலை மற்றும் குஷ்பு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் விபத்தில் இருந்து தப்பி வேல் யாத்திரையில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web