நடிகையும் ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளருமான குஷ்பு மீது வழக்கு பதிவு!

பாஜக வேட்பாளர் குஷ்பு மீது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பல கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி சட்டமன்ற தேர்தலில் தன்னுடன் கூட்டணியாக பாஜக மற்றும் பாமக கட்சிகளை வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

bjp

மேலும் அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியில் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரபல நடிகையான குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. அவர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அவர் அப்பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் மீது வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. இந்த வழக்கு கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது .தேர்தல் பறக்கும் படை மீது அச்சுறுத்தலை மீறி மசூதி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வெளியானது. இதைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு மீது கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web