காய்கறி விற்ற சாப்ட்வேர் எஞ்சினியர்: மீண்டும் வேலை கொடுத்த பிரபல நடிகர்

கொரன வைரஸ் ஊரடங்கு காரணமாக சாப்ட்வேர் பணியை இழந்த இளம் பெண் ஒருவருக்கு மீண்டும் அதே சாஃப்ட்வேர் பணியை வாங்கி கொடுத்த பிரபல நடிகர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் அவர்கள் கடந்த சில மாதங்களாக பல ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம் சமீபத்தில் கூட காளை மாடுகளை வாடகைக்கு எடுக்க கூட காசு இல்லாமல் மகள்களை வைத்து நிலத்தை உழுத விவசாயி ஒருவருக்கு
 

காய்கறி விற்ற சாப்ட்வேர் எஞ்சினியர்: மீண்டும் வேலை கொடுத்த பிரபல நடிகர்

கொரன வைரஸ் ஊரடங்கு காரணமாக சாப்ட்வேர் பணியை இழந்த இளம் பெண் ஒருவருக்கு மீண்டும் அதே சாஃப்ட்வேர் பணியை வாங்கி கொடுத்த பிரபல நடிகர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் அவர்கள் கடந்த சில மாதங்களாக பல ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்

சமீபத்தில் கூட காளை மாடுகளை வாடகைக்கு எடுக்க கூட காசு இல்லாமல் மகள்களை வைத்து நிலத்தை உழுத விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த சாரதா என்ற இளம் பெண் ஊரடங்கு காரணமாக சாப்ட்வேர் வேலையை இழந்த நிலையில் தனது சொந்த ஊரில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்

இவர் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளிவந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூட், உடனடியாக அந்த பெண்ணுக்கு வேறு நிறுவனத்தில் சாப்ட்வேர் பணியை வாங்கி கொடுத்துள்ளார்

இதற்கான பணி நியமன ஆணையை அவர் தனது உதவியாளர் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சோனு சூட் தற்போது மீண்டும் ஒரு சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்த இளம்பெண்ணின் வாழ்க்கையிலும் ஒளியேற்றி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web