நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் நடிகை குஷ்புவின் வேட்பு மனு ஏற்பு!

சுயச்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்புவின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. இதற்காக ஆளும் கட்சி அதிமுக- பாஜக கூட்டணி வைத்துள்ளது. பாஜக கட்சிக்கு அதிமுக 20 தொகுதி கொடுத்தது. இந்நிலையில் இதற்கு வலுவாக, இதற்கு போட்டியாக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி  தன்னுடன் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

mansoor ali khan

அதற்கான வேட்பாளர் ,தேர்தல் அறிக்கையும் பல்வேறு கட்சிகள் வெளியிட்டு வந்தன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடி தொகுதியிலும் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது.

பிரபல நடிகை குஷ்பு பாஜக சார்பில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வந்தது. அதற்கான வேட்புமனுவை நடிகை குஷ்பு தாக்கல் செய்த நிலையில் அவரது வேட்புமனு தற்போது ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர்அலிகான் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் தற்போது ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

From around the web