சபரிமலைக்கு பெண்கள் வந்தால் இரண்டாக வெட்ட வேண்டும்: விக்ரம் பட நடிகர்

சபரிமலைக்கு வரும் 18ஆம் தேதி முதல் பெண்களும் வழிபட அனுமதிக்கப்படுவர் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து கேரள அரசு அறிவித்துள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்ட வேண்டும் என்று விக்ரம் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கிய ‘அருள்’ படத்தில் எம்.எல்.ஏவாக நடித்த கொல்லம் துளசி. இவர் நேற்று கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
 

 சபரிமலைக்கு பெண்கள் வந்தால் இரண்டாக வெட்ட வேண்டும்: விக்ரம் பட நடிகர்

சபரிமலைக்கு வரும் 18ஆம் தேதி முதல் பெண்களும் வழிபட அனுமதிக்கப்படுவர் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து கேரள அரசு அறிவித்துள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்ட வேண்டும் என்று விக்ரம் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கிய ‘அருள்’ படத்தில் எம்.எல்.ஏவாக நடித்த கொல்லம் துளசி. இவர் நேற்று கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அவர்களை பாதியாக வெட்டிப்போட வேண்டும். ஒரு பாதியை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். இன்னொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வீச வேண்டும்’ என்று ஆவேசமாக கூறினார்

சபரிமலைக்கு பெண்கள் வந்தால் இரண்டாக வெட்ட வேண்டும்: விக்ரம் பட நடிகர்நடிகர் கொல்லம் துளசியின் இந்த பேச்சு கேரளா மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் துளசி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

From around the web