எஸ்பிபி கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்ட பிரபல நடிகர்! வைரலாகும் டுவீட்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்காக நாளை மாலை 6 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும் என்றும், இந்த பிரார்த்தனையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா,ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த திரையுலகமும் இந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்வதாக நடிகர்
 

எஸ்பிபி கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்ட பிரபல நடிகர்! வைரலாகும் டுவீட்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்காக நாளை மாலை 6 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும் என்றும், இந்த பிரார்த்தனையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா,ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த திரையுலகமும் இந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்வதாக நடிகர் கார்த்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எஸ்பிபி அவர்களுக்காக செய்யப்படும் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் என்றும் அதன் மூலம் எஸ்பிபி அவர்கள் குணமடைவார் என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார்

கார்த்தியின் இந்த டுவிட்டை அவருடைய சகோதரர் நடிகர் சூர்யா மறுட்விட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து நாளை நடைபெற உள்ள கூட்டு பிரார்த்தனையினல் எஸ்பிபி பாடல்கள் ஒளிபரப்பி பிரார்த்தனை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது உலகமே ஒரு பாடகருக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்து வருவதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனையின் பலனாக எஸ்பிபி அவர்கள் மீண்டு வருவார் என்று நம்பப்படுகிறது

From around the web