நடிகரும், கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தல் வேட்பாளருமான விஜய் வசந்த் மக்களை சந்தித்தார்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளது. பல கட்சிகள் தங்களது வேட்பாளர்களுக்கும் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக செயல்பட்டு கொண்டு வருகிறார்.

பல தலைவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 பல தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற சீட்டும் வழங்கபட்டது. அதன்படி கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது போட்டியிட உள்ளதாகவும் தகவல் .
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக இருந்த வசந்த் மறைவையொட்டி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது .தற்போது அத்தொகுதியில் அவரின் மகனான நடிகர் விஜய் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் அவர் மக்களை சென்று ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் அவர் கன்னியாகுமரி பகுதியில் துறைமுகம் வராது என பாஜக பொய் பரப்புரை கூறியதாகவும் கூறினார். மேலும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடவுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.