நடிகரும் காங்கிரஸ் வேட்பாளருமான விஜய் வசந்த் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்!
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தாக்கல் செய்தார்!
Thu, 18 Mar 2021

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது.கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக இருந்த வசந்த் மரணத்தை ஒட்டி அப்பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

காங்கிரஸ் கட்சியானது அவரது மகனான நடிகர் விஜயவசந்த்தை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில் அவர் தற்போது தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மேலும் பாஜகவின் முன்னாள் எம்பி ஆன பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் எதிர் கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் மிகவும் போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.