தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் ஆனந்த்ராஜ்: என்ன காரணம்?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆனந்தராஜ் நேரில் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் பேச்சாளராக இருந்தார் என்பதும், அதன் பின்னர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அவர் அதிமுகவில் இருந்து விலகினார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது அவர் எந்த கட்சியையும் சாராமல் இருந்து வரும் நிலையில் இன்று அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தார். தனது மகள் திருமணத்திற்காக முதல்வர் அவர்களை அழைப்பதற்காக திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து ஆனந்தராஜ் மகள் திருமணத்தில் கண்டிப்பாக தான் கலந்து கொள்வதாக முதல்வர் வாக்குறுதி அளித்ததாகவும் திருமண அழைப்பிதழ் கொடுக்கவே முதல்வரை சந்தித்ததாகவும் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் அதிமுக அணியில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்