பள்ளிக்கு வரக் கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்!!!

பள்ளிக்கு வர கட்டாயத்தினால் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளனர் நீதிபதிகள்
 
school

தற்போது நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக பள்ளி கல்லூரிகள் திறந்து காணப்படுகிறது. மேலும் பலரும் பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு செல்கின்றனர் ஏனென்றால் சில நாட்களாகவே நம் தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பெற்றோர்கள் மாணவர்கள் பலரும் பள்ளிக்கு செல்வது கொரோனா அதிகரிக்கும் என்று எண்ணியிருந்தனர். இந்த மாதம் முதல் முதலிலேயே அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன. மேலும் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.school

இந்நிலையில் கொரோனா நோயின் தாக்கமும் தற்போது தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது நீதிபதிகள் பள்ளிக்கு வரக் கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். அதன்படி மாணவர்களை வகுப்புக்கு வர வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் அனுமதித்தனர்.

மேலும் மாணவர்கள் கண்டிப்பாக வகுப்புக்கு வரவேண்டும் என்று சில பள்ளிகள் கட்டாய படுத்துவதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார். மேலும் கட்டாயப்படுத்த பள்ளிகள் விவரங்களை மனுதாரர் தெரிவித்தால் அவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு தடை கோரி அப்துல் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு இன்னும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மனுதாரர் கூறியுள்ளார். கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.பல பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை என்றும் புகார் அளித்துள்ளார். மேலும் நீதிபதி துரைசாமி முரளி சங்கர் அமர்வு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30 ஒத்திவைத்தது. 

From around the web