அதிரடி போராட்டம்! தீப்பெட்டி தொழிற்சாலை வேலை நிறுத்தம்!

தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்!
 

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று உள்ளதாக உள்ளது. திருநெல்வேலியில் அல்வாவும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா போன்ற ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு உணவு பொருளுக்கும் சிறப்பினைப் பெற்றுள்ளது. மேலும் திண்டுக்கல்லில் பூட்டும் சிவகாசியில்  பட்டாசும் மிகவும் புகழ் பெற்றதாக உள்ளது.

match box

இந்நிலையில் தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆனது அதிகம் காணப்படும் பகுதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி.  கோவில்பட்டி பகுதியில் தான் அமைச்சர் கடம்பூர் ராஜு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அப்பகுதியில் கடலை மிட்டாயும் மிகவும் சிறப்பு பெற்றதாக உள்ளது.

 தற்போது தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மார்ச் 30ஆம் தேதி வரை வேலை நிறுத்தம் என அறிவிப்பு வெளியானது. தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை ஏற்றம், லாரி வாடகை உயர்வு உள்ளிட்ட பல காரணத்தால் கண்டித்து வேலைநிறுத்தம்  தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து தகவல் வெளியானது. இதனால்  பல்வேறு மாவட்டங்களில் தீப்பெட்டிகள் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web