அதிரடி அறிவிப்பு! இனி கொரோனா  தடுப்பூசி  வீட்டிலேயே வந்து போடப்படும்!!

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்!
 
அதிரடி அறிவிப்பு! இனி கொரோனா தடுப்பூசி வீட்டிலேயே வந்து போடப்படும்!!

தற்போது  கொரோனா  தாக்கம் அதிகமாக பேசப்படுகிறது.  நாட்டுமக்கள் பலரும் கொரோனா  நோய்க்கு எதிராகப் போராடுவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். இதன் மத்தியில் கொரோனா  நோய் தாக்கம் எழுந்துள்ள நிலையில் தமிழகத்தில் புதியதாக ஆட்சி உருவாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மேலும் இவர்கள் ஆட்சியில் ஆரம்பத்திலேயே தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது .subramanian

ஆயினும் அவர்கள் தங்களது ஆட்சியை மிகவும் திறம்பட செய்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ளார் திரு மு க ஸ்டாலின் அவர் மக்களுக்கு உதவும் வண்ணமாக அவரோடு சேர்த்து 34 அமைச்சர்களை நியமித்துள்ளார். அவர்களும் தங்களது பணியை மிகவும் திறம் பட செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அமைச்சர் சுப்பிரமணியன் தடுப்பூசி குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் தடுப்பூசி போடும் திட்டத்தை நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைப்பார் எனவும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டால் கொரோனா முழுமையாக முடிந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் தனியார் மருத்துவமனையில் போலி ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்டது மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததாக என் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மேலும் இந்த போலி ரெம்டெசிவிர் மருந்தை விற்ற சுரேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுப்ரமணியன் கூறியுள்ளார். மேலும் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி ஆக்சிசன் எடுத்துக்கொள்வது தவறு எனவும் அதே முயற்சிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். கிராமப்பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான வசதிகள் செய்து தரப்படும் அதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

From around the web