போலி சான்றிதழை சரிபார்க்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை!!

போலி சான்றிதழ்களை சரி பார்க்காமல் பணி நியமனம் வழங்கி அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவு
 
fake certificcate

தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக போலி காணப்படுகிறது. மேலும் பணத்தில் ஆரம்பித்து தற்போது பணியிடங்களில் கூட போலி சான்றிதழ், போலி என்ற வார்த்தை அதிகமாக காணப்படுகிறது. இதனால் மருத்துவத்துறையில் கூட அவ்வப்போது போலி மருத்துவர்களின் வரத்தும் அதிகரித்துள்ளது. இவை மக்களுக்கு மிகுந்த சோகத்தை அளிப்பதாக காணப்படுகிறது. தற்போது இது குறித்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அதன்படி போலி சான்றிதழை சரிபார்க்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.highcourt

மேலும் போலி சான்றிதழ் சரிபார்க்காது பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் போலி  பள்ளி மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பித்த அரசு பேருந்து ஓட்டுனர் சீனிவாசன் பணிநீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் நல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓட்டுநர் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். போலி   அளித்தவர்கள் சிறிய தண்டனையுடன் கூடிய பணியில் தொடரும் போது தான் மட்டும் பணி நீக்கம் பண்ண முடியும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.மேலும் மனுதாரர் போலி சான்றிதழ் சமர்ப்பித்தது ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகி உள்ளதால் பணிநீக்கம் செய்தது சரிதான் என்று கூறியுள்ளது. மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

From around the web