ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியின் முதல்வர் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது!
 

தமிழகத்தில் சட்டமன்றதேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி உள்ளன. ஆளும் கூட்டணிக் கட்சியான அதிமுக  பாஜகவின் கூட்டணி உள்ளன. எதிர்க்கட்சியான திமுக கட்சி கூட்டணி ஆக காங்கிரஸ் கட்சியை வைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் எந்த ஒரு கூட்டணியுமின்றி 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி ஆனது தனித்துப் போட்டியிடுவதாகவும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்தது.

dmk

தேர்தல் ஆணையம் ஆனது நேற்றைய தினமே வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என அறிவித்து நிலையில் அதற்கான வேட்புமனுக்கள் தமிழகத்தில் நேற்றைய தினம்  வந்தன.  இன்றைய தினம் காலையில் இருந்து வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன் மத்தியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு தற்போது ஏற்பட்டுள்ளது.

மேலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வேட்புமனுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எதிர் கட்சியின் தலைவராக உள்ள மு க ஸ்டாலின்  வேட்பு மனுவும் தற்போது ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவ்விரு தலைவர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டு வருகின்றனர்.

From around the web