அப்பாடா பல நாட்களுக்குப் பின்பு "நைட் பஸ் டிராவல்";அதுவும் ரெண்டு நாளைக்கு!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு 4500 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது!
 
night bus

தற்போது நம் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காரணம் என்னவெனில் தற்போது ஆட்கொல்லி நோயின் தாக்கம் நாடெங்கும் மிகவும் தீவிரமடைந்துள்ளது .அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் இந்த கொரோனா நோயானது மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தியது ஆட்சிக்கு வந்த திமுக. அதன்படி இதனை தமிழக முதல்வராக உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.  இந்த ஊரடங்கு  மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.bus

அதன்படி மே இருபத்தி நாலாம் தேதி முதல் இந்த ஊரடங்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் வீடுகளில் இருந்தே ஒரு வார காலத்திற்கு பணியாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் கடைகள் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வெளியூர் பயணிகளும் பயனளிக்கும் வகையான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 4500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

காரணம் தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்ய  1500 சிறப்பு பேருந்துகளும், கோவை திருப்பூர் சேலம் திருச்சி மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே மூவாயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு இரவு நேரங்களிலும் முழுமையாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

From around the web