ஆதார்-ரேசன் இணைப்பு: செப்டம்பர் 30 வரை அவகாசம்!

 
ration

ஆதார் அட்டையை கிட்டதட்ட அனைத்து ஆவணங்களுடன் இணைக்க வேண்டுமென ஏற்கனவே மத்திய அரசு பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. நாடு முழுவதும் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கார்டை வைத்து எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

அதனால் ரேஷன் கார்டை கண்டிப்பாக அனைவரும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை இணைப்புக்கு ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் அளித்து வந்த நிலையில் தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

ஏற்கனவே 95 சதவீதத்துக்கும் மேலானவர்கள் ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைத்து விட்டார்கள் என்றும் மீதமுள்ளவர்கள் தற்போது இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

From around the web