ஆதார் - இபிஎஃப் கட்டாயம் இணைக்க வேண்டும்: அதிரடி அறிவிப்பு

 
epf

ஆதார் எண் மற்றும் இபிஎஃப் ஆகிய இரண்டையும் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்றும் ஜூன் 1-ஆம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொழிலாளர் வைப்பு நிதிக்கான இபிஎஃப் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் ஆதார் எண்களை இணைக்காத தொழிலாளர் வைப்பு கணக்கில் நிதிகள் இணைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு சென்று ஆதார் எண்ணை இபிஎஃப் கணக்குடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 

இதற்காக www.epfindia.gov.in and log in என்ற இணைய தளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அதில் e-KYC Portal - link UAN Aadhar என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து உங்களுடைய ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு ஓடிபி எண் வரும். அந்த எண்ணை பதிவு செய்துவிட்டால் இபிஎப் மற்றும் ஆதார் இணைந்துவிடும். இதனை கண்டிப்பாக ஜூன் 1-ஆம் தேதி முதல் வழிமுறை படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web