தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதி!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை தினம் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் வேறுபடுத்தி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. காலையில் தொடங்கி நாளை இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளையும் விதிமுறைகளையும் விதித்துள்ளது.

voting machine

மேலும் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். அவர் சில தினங்களாக செய்தியாளர்களிடம் சில தகவல்களை வெளியிட்டார். தமிழகத்தில் நாளைய தினம் வாக்களிக்க 6.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றதாக தகவல் வெளியானது. அதில் 3.09கோடி ஆண்களும் 3.19 கோடி பெண்களும் 7192 திருநங்கைகளும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் கொரோனா பரவாமல் தடுக்க வாக்காளர்கள் மாஸ்க்,கையுறை அணிந்து வாக்களிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளது .மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாளை கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கவும் அனுமதித்தது. நாளை மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

From around the web