ஒரே ஒரு வேப்பங்குச்சி ரூ.1800ஆ? ஆன்லைன் கொள்ளை

 
neem

ஆன்லைனில் பல் விளக்க பயன்படுத்தப்படும் வேப்பங்குச்சி ரூ.1800 என விற்பனை செய்யப்பட்டு வருவது பகல் கொள்ளையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் என்பது தெரிந்ததே. ஆனால் நவநாகரீக உலகில் இருக்கும் பொது மக்கள் பலரும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட பேஸ்ட்களை பல் விளக்க பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்று பல் விளக்கும் வேப்பங்குச்சியை ஆர்கானிக் டூத்பேஸ்ட் எனக்கூறி ரூபாய் 1800 என விற்பனை செய்து வருகிறது 

இதனை பார்த்த இந்திய மக்கள் கொதித்தெழுந்து உள்ளனர். இந்தியாவில் இலவசமாக, தெருவுக்கு தெரு கிடைக்கும் வேப்பங்குச்சியை ரூ.1800 என விற்பனை செய்து வருவது பகல் கொள்ளை என்றும் கூறி வருகின்றனர்

From around the web