ஒரு பிளேட் பிரியாணி ரூ.20 மட்டுமே, ஏழைகளுக்கு இலவசம்: சென்னை பெண்ணின் சேவை

 

ஒரு பிளேட் பிரியாணியை சென்னை பெண் ஒருவர் ரூ.20க்கு அதுவும் இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக பிரியாணியை விற்பனை செய்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

ஹோட்டல்களில் ஒரு பிளேட் பிரியாணி 100 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கோவையில் சாலையோர பிரியாணி கடை ஒன்றை வைத்துள்ளார். சப்ரினா என்ற பெயரைக் கொண்ட இந்த பெண்மணி கோவையில் சாலையோரம் வைத்துள்ள பிரியாணி கடையில் ருசி அமோகமாக இருப்பதால் பொதுமக்கள் அவரிடம் தேடி வந்து பிரியாணியை வாங்கிச் செல்கின்றனர்

biriyani

ஒரு பிளேட் இருபது ரூபாய் என்ற விலையில் பிரியாணியை விற்பனை செய்யும் அவர் ருசியாகவும் கொடுக்கின்றார் என்பதால் அந்த பகுதி மக்கள் அனைவரும் அவரிடம் தான் வழக்கமாக பிரியாணி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். 20 ரூபாய் கூட கொடுக்க முடியாத ஏழைகள் என்றால் அவர்களுக்கு இலவசமாகவே பிரியாணியை அவர் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏழை எளியவர்கள் மற்றும் ஆதரவற்ற அவர்களின் பசியைப் போக்குவதற்காக தான் இந்த கடையை வைத்திருப்பதாகவும் இதில் நஷ்டம் ஏதுமில்லை என்றும் தனக்கு தேவையான வருமானம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும் அதன் மூலம் எதுவும் செய்யமுடியும் என்று சப்ரினா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

From around the web