ஊரடங்கால் மூன்று மாநில எல்லையில் நடந்த திருமணம்: நடுரோட்டில் நின்று மணமகன் தாலி கட்டினார்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. குறிப்பாக மார்ச் மாதம் முதல் நடத்த திட்டமிட்ட திருமணங்கள் பல ரத்து செய்யப்படும் ஒரு சில திருமணங்கள் எளிய முறையில் தாமதமாகவும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக இருவேறு மாநிலங்களைச் சேர்ந்த மணமகன், மணமகள் ஆக இருந்தால்
 

ஊரடங்கால் மூன்று மாநில எல்லையில் நடந்த திருமணம்: நடுரோட்டில் நின்று மணமகன் தாலி கட்டினார்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. குறிப்பாக மார்ச் மாதம் முதல் நடத்த திட்டமிட்ட திருமணங்கள் பல ரத்து செய்யப்படும் ஒரு சில திருமணங்கள் எளிய முறையில் தாமதமாகவும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக இருவேறு மாநிலங்களைச் சேர்ந்த மணமகன், மணமகள் ஆக இருந்தால் அவர்களது திருமணம் பெரும் சிக்கலில் உள்ளது என்பதும் இபாஸ் கிடைக்காமல் திருமணங்கள் தள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த மணமகன் மற்றும் கேரளாவை சேர்ந்த மணமகளுக்கு திருமணம் நடத்த கடந்த ஏப்ரல் மாதமே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இருவரும் மாநில எல்லையை கடக்க வேண்டியிருந்ததால் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தனர்

இந்த நிலையில் தற்போது கேரளா தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் சாம்ராஜ்நகர் என்ற பகுதியில் நேற்று இவர்களது திருமணம் நடந்தது. இருவரும் தங்களது மாநில எல்லையை தாண்டிச் சென்றால் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்பதால் இதனை தவிர்க்க மூன்று மாநில எல்லையில் நடுரோட்டில் திருமணம் செய்து கொண்டனர்

சாலையில் நின்றுகொண்டே மணமகள் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார். அருகில் இருந்த இரு தரப்பின் உறவினர்கள் வாழ்த்துக் கூறினார்கள். இந்த திருமணம் முடிந்ததும் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் தத்தமது வீடுகளுக்குச் சென்று விட்டதாகவும் விரைவில் மற்ற சடங்குகள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது

From around the web