ஆசை வார்த்தைகளை கூறி ஆட்டோவை திருடிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் ஜாவின் என்பவர். இவர் ஓலா நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். துரை என்பவர் கிண்டி கத்திப்பாறையில் இருந்து ஓலா ஆட்டோவை பதிவு செய்துள்ளார். துரை ஆட்டோ ஓட்டுனர் ஜாவினிடம் சினிமா ஏஜெண்ட் என கூறியுள்ளார். இப்பொழுது சாலிகிராமம் சென்று சில துணை நடிகைகளை அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார். துரை ஜாவினிடம் பல ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். சினிமா பட வாய்ப்புகள் வாங்கித் தருவதாகவும் சினிமாவில் சிறிய கதாப்பாத்திரம் உள்ளதாகவும் அதனை
 
ஆசை வார்த்தைகளை கூறி ஆட்டோவை திருடிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் ஜாவின் என்பவர். இவர் ஓலா நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

துரை என்பவர் கிண்டி கத்திப்பாறையில் இருந்து ஓலா ஆட்டோவை பதிவு செய்துள்ளார். துரை ஆட்டோ ஓட்டுனர் ஜாவினிடம் சினிமா ஏஜெண்ட் என கூறியுள்ளார். இப்பொழுது சாலிகிராமம் சென்று சில துணை நடிகைகளை அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார்.

ஆசை வார்த்தைகளை கூறி ஆட்டோவை திருடிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு

துரை ஜாவினிடம் பல ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். சினிமா பட வாய்ப்புகள் வாங்கித் தருவதாகவும் சினிமாவில் சிறிய கதாப்பாத்திரம் உள்ளதாகவும் அதனை ஜாவினுக்கு வாங்கித் தருவதாகவும், ஜாவினை நம்ப வைத்துள்ளார்.

பின்னர் சாலிகிராமத்தில் ஒரு டீ கடையில் ஜாவினை காத்திருக்க சொல்லியும் நடிகைகளை நானே சென்று ஆட்டோவில் அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார் துரை. ஜாவினும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

வெகு நேரமாகியும் துரை வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த ஜாவின் தெருவின் எல்லைக்குச் சென்று பார்த்தார்; அங்கு ஆட்டோவும் இல்லை; துரையும் இல்லை. அப்போதுதான் ஜாவினிற்கு புரிந்தது துரை ஆட்டோவை திருடவே பல ஆசை வார்த்தைகளை கூறி இருப்பது.

தகவல் அறிந்த விருகம்பாக்கம் போலீஸ்சார் அத்தெருவில் உள்ள சிசிடிவி பதிவை கொண்டு துரையை தேடி வருகின்றனர்.

From around the web