சாத்தான்குளம் போல் இன்னொரு அதிர்ச்சி சம்பவம்: போலீஸ் டார்ச்சரால் தற்கொலை

சாத்தான்குளம் காவல்துறையினரால் தந்தை மகன் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட நிலையில் தற்போது தென்காசி அருகே போலீஸ் டார்ச்சரால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்ற அருள்ராஜ் என்பவரை அரைநிர்வாணப்படுத்தி போலீஸார் அடித்ததாகவும், இந்த மன உளைச்சலில் அருள்ராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது கணவர் வீட்டுக்கு வரவில்லையென ஜமுனா காவல்நிலையம் சென்று பார்த்தபோது அருள்ராஜ் அரைநிர்வாண
 

சாத்தான்குளம் போல் இன்னொரு அதிர்ச்சி சம்பவம்: போலீஸ் டார்ச்சரால் தற்கொலை

சாத்தான்குளம் காவல்துறையினரால் தந்தை மகன் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட நிலையில் தற்போது தென்காசி அருகே போலீஸ் டார்ச்சரால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்ற அருள்ராஜ் என்பவரை அரைநிர்வாணப்படுத்தி போலீஸார் அடித்ததாகவும், இந்த மன உளைச்சலில் அருள்ராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

கணவர் வீட்டுக்கு வரவில்லையென ஜமுனா காவல்நிலையம் சென்று பார்த்தபோது அருள்ராஜ் அரைநிர்வாண கோலத்தில் உடல் முழுதும் காயங்களுடன் இருந்ததாகவும், வீட்டிற்கு வந்ததும் தன்னை காவலர்கள் அசிங்கப்படுத்தியதாக கூறி கண்ணீர் சிந்தியதாகவும் பின்னர் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மருத்துவமனையில் இருக்கும்போது அருள்ராஜ் மனைவி ஜமுனாவிடம் இதனை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று எஸ்.ஐ .சுரேஷ் உள்ளிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியுள்ளதாகவும், இது தொடர்பாக மறு விசாரணை வேண்டுமென ஜமுனா தொடர்ந்த வழக்கில் ஆலங்குளம் டி.எஸ்.பி. பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சாத்தன்குளம் தந்தை – மகன் மரண சம்பவத்தை விசாரிக்கும் அமர்வில் இருக்கும் நீதிபதி புகழேந்தி அவர்கள் தான் இந்த வழக்கையும் விசாரித்து வருவதாக தெரிகிறது

From around the web