பிடித்தம் செய்த பணத்தை திருப்பி அளியுங்கள்: வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு

மின்னணு பணப்பரிவர்த்தனைகாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு உடனே திருப்பித் தாருங்கள் என மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மின்னணு பணபரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு பொது மக்களுக்கு ஊக்கப்படுத்தி வந்தது. வங்கிகளும் இதனை வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தின. 40,000 ரூபாய்க்கு மேல் எடுப்பதாக இருந்தால் மட்டும் வங்கிக்கு வாருங்கள் என்றும் அதற்கு குறைவாக இருந்தால் ஆன்லைன் வழியிலோ அல்லது ஏடிஎம் வங்கிகளிலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தின. ஆனால் அதே
 
பிடித்தம் செய்த பணத்தை திருப்பி அளியுங்கள்: வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு

மின்னணு பணப்பரிவர்த்தனைகாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு உடனே திருப்பித் தாருங்கள் என மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மின்னணு பணபரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு பொது மக்களுக்கு ஊக்கப்படுத்தி வந்தது. வங்கிகளும் இதனை வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தின. 40,000 ரூபாய்க்கு மேல் எடுப்பதாக இருந்தால் மட்டும் வங்கிக்கு வாருங்கள் என்றும் அதற்கு குறைவாக இருந்தால் ஆன்லைன் வழியிலோ அல்லது ஏடிஎம் வங்கிகளிலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தின.

ஆனால் அதே நேரத்தில் இன்டர்நெட் மூலம் பண பரிவர்த்தனை செய்யப்பட்டதற்கு வங்கிகள் கட்டணம் வசூலித்து வந்தன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பரிவர்த்தனைக்கு மட்டும் இலவசம் என்றும் அதற்குப் பிறகான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலித்தும் வந்தன

இந்த நிலையில் ஒரு சில வங்கிகள் யூபிஐ பயன்படுத்தினாலும், அதற்கும் கட்டணம் வசூலித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் மின்னணு பணப் பரிவர்த்தனை விதிக்கப்பட்ட கட்டணங்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி தந்து விடுங்கள் என வங்கிகளுக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

அதே போல் ரூபே கார்டு மற்றும் யூபிஐ பரிவர்த்தனைகளும் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என உத்தரவிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web