அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு: முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு

மருத்துவப் படிப்பின் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவ மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்று முன்னர் சட்டசபையில் 110 விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு எழுதும் மாணவர்களில், அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு செய்துள்ளார்.
 
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு: முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு

மருத்துவப் படிப்பின் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவ மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்று முன்னர் சட்டசபையில் 110 விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு எழுதும் மாணவர்களில், அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு செய்துள்ளார். இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உள்ஒதுக்கீடு தொடர்பாக பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும், அரசு பள்ளி மாணவர்கள், குறைவாக சேர்வதற்கான காரணங்களை ஆய்வு செய்து, ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்றும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.

மேலும் உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web