பல நாட்களுக்குப் பின்பு குமரி மக்களுக்கு ஓர் சந்தோசமான தகவல்!!

குமரி மாவட்டத்தில் பூக்களின் விலையானது மிகவும் குறைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது!
 
kaniyakumari

நம் இந்தியாவை சுற்றியுள்ள அரபிக்கடல் வங்கக்கடல் இந்திய பெருங்கடல் மூன்றும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் பகுதியாக காணப்படுகிறது நம் தமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரி. மேலும் இங்குள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அனைத்து வித சுற்றுலாப்பயணிகளின் பார்வையை தன் வசமாக ஈர்க்கும், இத்தகைய கன்னியாகுமரியில் எப்பொழுதும் குளிர்ந்த வானிலையே காணப்படும். மேலும் தமிழகத்தில் கோடை காலம் நிகழ்ந்தாலும் கன்னியாகுமரியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்தது.flowers

இதனால் கன்யாகுமரியில் காணப்படுகின்ற அனைத்து அணைகளும் அதிகமாக நிறைந்தது. மேலும் அவை திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஓடியது. இத்தகைய சோகத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தற்போது இன்பமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு நாளுக்கு முன்பு விற்ற பிச்சிப்பூ ஒரு கிலோ வானது 500க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது அவை 150க்கு மட்டுமே விற்கப்படுகிறது.

மேலும் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது மல்லிகை பூ கிலோ 80 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது. ரோஜா, அரளி, சாமந்தி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் வகைகள் விலை குறைந்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.தொடர் மழைக்கு பின்னர் தற்போது தொடர் சந்தோசமான தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web