தேசிய கொடி ஏற்றிய முன்னாள் நக்சல் தலைவர்: வைரலாகும் புகைப்படங்கள்!

நேற்று நாடு முழுவதும் இந்தியாவின் 64வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது என்பதும் டெல்லி செங்கோட்டையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்கள் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் தேசியவாதிகள் மட்டுமின்றி தீவிரவாதம் செய்து திருந்தியவர்களும் நேற்று தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் நக்சல் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் திருந்தி தற்போது தேசிய
 

தேசிய கொடி ஏற்றிய முன்னாள் நக்சல் தலைவர்: வைரலாகும் புகைப்படங்கள்!

நேற்று நாடு முழுவதும் இந்தியாவின் 64வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது என்பதும் டெல்லி செங்கோட்டையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தேசியவாதிகள் மட்டுமின்றி தீவிரவாதம் செய்து திருந்தியவர்களும் நேற்று தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் நக்சல் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் திருந்தி தற்போது தேசிய கொடியேற்றி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

தேசிய கொடி ஏற்றிய முன்னாள் நக்சல் தலைவர்: வைரலாகும் புகைப்படங்கள்!

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மெலட்டூர் என்ற பகுதியை சேர்ந்த முன்னாள் நக்ஸல் தலைவர் ஒருவர் நேற்று தேசிய கொடியை ஏற்றினார். அவர் அந்த பகுதி மக்களுடன் இணைந்து தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினார்

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது ’நான் சிறுவயதிலிருந்து தவறான பாதைக்கு சென்று விட்டேன். அதன் பிறகு என்னை நானே திருத்திக்கொண்டு நல்வழியில் தேறி உள்ளேன். தற்போது தேசபக்தன் ஆகி தேசியக் கொடியை ஏற்றி உள்ளது எனக்கு பெருமையாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்
கடந்த சில ஆண்டுகளில் பல நக்சல் தீவிரவாதிகள் மனம் திருந்தி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web