தங்க கடத்தல் குறித்த வழக்கின் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்தது: கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் ஸ்வப்னா என்ற பெண் சமீபத்தில் அரபு நாடுகளிலிருந்து தங்க கடத்தலில் ஈடுப்பட்டார் என்பதும் அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே இந்த வழக்கு மிக தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கு குறித்த முக்கிய ஆவணங்கள் திடீரென தீயில் எரிந்துவிட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணை ஆவணங்களும் தீயில் எரிந்துவிட்டதாகவும், குறிப்பாக இந்த வழக்கில் அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட கோப்பு
 

தங்க கடத்தல் குறித்த வழக்கின் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்தது: கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் ஸ்வப்னா என்ற பெண் சமீபத்தில் அரபு நாடுகளிலிருந்து தங்க கடத்தலில் ஈடுப்பட்டார் என்பதும் அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே

இந்த வழக்கு மிக தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கு குறித்த முக்கிய ஆவணங்கள் திடீரென தீயில் எரிந்துவிட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது

மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணை ஆவணங்களும் தீயில் எரிந்துவிட்டதாகவும், குறிப்பாக இந்த வழக்கில் அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட கோப்பு ஒன்றும் தீயில் கருகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒன்று சேர்ந்து இதுகுறித்து போராட்டம் நடத்தினர் கேரளத் தலைமைச் செயலகம் முன் இன்று நடைபெற்ற போராட்டம் காரணமாக பாஜக தலைவர் சுரேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சுரேந்திரன் இதுகுறித்து கூறியதாவது ’கண்டிப்பாக இது தானாக எரிந்த தீ விபத்தாக இருக்காது. திட்டமிட்டு வைக்கப்பட்டதாக தான் இருக்க வேண்டும். உண்மையை வெளியே கொண்டு வராமல் மறைப்பதற்காகவே இந்த தீ விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதுகுறித்த உண்மைகளை கண்டு பிடிக்காமல் விடமாட்டேன்’ என்று அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web