இறந்த கர்ப்பிணி யானையை சிற்பமாக சாக்பீசில் வடித்த மாணவர்!!

கொரோனா வைரஸ் மனித இனத்திற்கு வந்த சாபக்கேடாக கருதும் நிலையில், அவ்வப்போது அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன, கொரோனாவை அடுத்து வெட்டுக் கிளி படையெடுப்பு, கேஸ் லீக், நிசர்கா புயல் என பல பேரழிவுகள் மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கோட்டினைச் சார்ந்த வனப்பகுதியில் இருந்த காட்டு யானை ஒன்று பசியால் ஊருக்குள் புகுந்துள்ளது, ஆனால் அந்த யானை வெடி பொருள் வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்டுவிட, வாய்ப்பகுதி
 
இறந்த கர்ப்பிணி யானையை சிற்பமாக சாக்பீசில் வடித்த மாணவர்!!

கொரோனா வைரஸ் மனித இனத்திற்கு வந்த சாபக்கேடாக கருதும் நிலையில், அவ்வப்போது அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன, கொரோனாவை அடுத்து வெட்டுக் கிளி படையெடுப்பு, கேஸ் லீக், நிசர்கா புயல் என பல பேரழிவுகள் மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது.

அந்த வகையில் சமீபத்தில் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கோட்டினைச் சார்ந்த வனப்பகுதியில் இருந்த காட்டு யானை ஒன்று பசியால் ஊருக்குள் புகுந்துள்ளது, ஆனால் அந்த யானை வெடி பொருள் வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்டுவிட, வாய்ப்பகுதி மற்றும் தாடை பகுதி சிதைந்தது.

இறந்த கர்ப்பிணி யானையை சிற்பமாக சாக்பீசில் வடித்த மாணவர்!!

அதன்பின்னர் வலியால் துடித்த யானை பலியானது. அதிலும் இந்த யானை கர்ப்பிணியாக இருந்ததால் பொதுமக்கள் பலரும் இந்த சம்பவத்தால் வெகுண்டு எழுந்தனர். அதனை அடுத்து நேற்று முன் தினம் வட மாநிலத்தில் ஒரு பசுவும் வெடிமருந்து இருந்த உணவினைச் சாப்பிட தாடைப் பகுதி வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.

இறந்த யானையின் நினைவாக பலரும் யானை குட்டியுடன் இருப்பதுபோன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் மாமல்லபுரத்தில் உள்ள அரசினர் சிற்ப கலை கல்லூரியில் படித்துவரும் பிரேம்குமார் என்ற மாணவன் சாக்பீசில் யானையை வடிவமைத்துள்ளார்.

From around the web