தமிழகத்தில் ஒரு நாள்:16000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு! 100-ஐ கொரோனா பலி!

தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது!
 
தமிழகத்தில் ஒரு நாள்:16000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு! 100-ஐ கொரோனா பலி!

தமிழகத்தில் முன்பு எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற நிலைக்கு தள்ளியது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் எங்கு சென்றாலும் கொரோனா என்ற அச்சம் மக்கள் மனதில் மிகவும் அதிகமாக நிலவுகிறது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பு உடன் முக கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடித்து எங்கும் செல்கின்றனர். இத்தகைய சூழல் கடந்தாண்டில் நிலவிய போது கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.corona

எனினும் சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது மீண்டும் அதிகரித்து மக்களை மிகுந்த வேதனை படுகிறது.  மேலும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னை அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு கோயம்புத்தூர் திண்டுக்கல் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவது மக்களுக்கு பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பானது 16000 நெருங்கியுள்ளது மேலும் தமிழகத்தில் ஒரேநாளில் தற்போது 15 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மேலும் பலி எண்ணிக்கை யும் தமிழகத்தில் ஒரே நாளில் 100 தொடும் அபாயத்தில் உள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனாவினால் மேலும் 77 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து மக்களை மிகுந்த அச்சத்திற்கு தள்ளுகிறது.தமிழகத்தில் தினந்தோறும் இதுபோன்று அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர்.

From around the web