கைலாசாவில் உணவகம் அமைக்க கடிதம் எழுதியவர் மீது புகார்: பரபரப்பு தகவல்

சமீபத்தில் கைலாசா என்ற நாட்டை தான் ஆரம்பித்து இருப்பதாகவும் அந்த நாட்டின் நாணயத்தை வெளியிட்டு இருப்பதாகவும் நித்தியானந்தா பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் தெரிந்ததே இந்த நிலையில் கைலாசா நாட்டில் உணவகம் அமைக்க அனுமதி வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த டெம்பிள் சிட்டி என்ற ஓட்டல் அதிபர் கடிதம் எழுதினார். இந்த கடிதத்திற்கு பதில் கூறிய நித்தியானந்தா கைலாசா நாட்டில் உங்களது ஓட்டல்களை அமைக்க எனது அதிகாரிகளுக்கு உத்தரவு இடுகிறேன். கண்டிப்பாக உங்களுக்கு ஓட்டல் அமைக்க அனுமதி அளிக்கப்படும்
 

கைலாசாவில் உணவகம் அமைக்க கடிதம் எழுதியவர் மீது புகார்: பரபரப்பு தகவல்

சமீபத்தில் கைலாசா என்ற நாட்டை தான் ஆரம்பித்து இருப்பதாகவும் அந்த நாட்டின் நாணயத்தை வெளியிட்டு இருப்பதாகவும் நித்தியானந்தா பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் தெரிந்ததே

இந்த நிலையில் கைலாசா நாட்டில் உணவகம் அமைக்க அனுமதி வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த டெம்பிள் சிட்டி என்ற ஓட்டல் அதிபர் கடிதம் எழுதினார். இந்த கடிதத்திற்கு பதில் கூறிய நித்தியானந்தா கைலாசா நாட்டில் உங்களது ஓட்டல்களை அமைக்க எனது அதிகாரிகளுக்கு உத்தரவு இடுகிறேன். கண்டிப்பாக உங்களுக்கு ஓட்டல் அமைக்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஹோட்டல் அதிபரின் கடிதமும் நித்தியானந்தாவின் பதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது

இந்த நிலையில் கைலாசாவில் உணவகம் அமைக்க அனுமதி கோரி கடிதம் எழுதிய ஓட்டல் அதிபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட இந்த புகாரில் அரசால் தேடப்படும் ஒரு குற்றவாளிக்கு ஆதரவு தருவதாகவும் அவர் அமைத்திருப்பதாக கூறியிருக்கும் நாட்டில் ஓட்டல் நடத்த அனுமதி கேட்டது பெரும் தவறு என்றும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கைலாசாவில்உணவகம் அமைக்க அனுமதி கோரி கடிதம் எழுதிய ஓட்டல் அதிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web