கட்டணங்களை செலுத்தப்படும்படி வற்புறுத்தும் பள்ளிகளுக்கு எதிராக வழக்கு!

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றாலும் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதியாக அரசிடமிருந்து அறிவிப்பு வரவில்லை இந்த நிலையில் தனியார் பள்ளி நிர்வாகிகள் தற்போது மாணவர்களிடம் கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது ஊரடங்கு காலத்தில் கட்டணங்களை செலுத்தும்படி வற்புறுத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் அந்த எச்சரிக்கையை மீறி ஒரு சில தனியார் பள்ளிகள் மாணவர்கள்
 

கட்டணங்களை செலுத்தப்படும்படி வற்புறுத்தும் பள்ளிகளுக்கு எதிராக வழக்கு!

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றாலும் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதியாக அரசிடமிருந்து அறிவிப்பு வரவில்லை

இந்த நிலையில் தனியார் பள்ளி நிர்வாகிகள் தற்போது மாணவர்களிடம் கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

ஊரடங்கு காலத்தில் கட்டணங்களை செலுத்தும்படி வற்புறுத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் அந்த எச்சரிக்கையை மீறி ஒரு சில தனியார் பள்ளிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கட்டணத்தை செலுத்தும் படி வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் கட்டணங்களை செலுத்தும்படி வற்புறுத்தும் பள்ளிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது

தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசாணை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் இந்த மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web