தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு: பெரும் பரபரப்பு

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த நிலையில் அவர் திடீரென தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார் தமிழக பாஜக தலைவராக எல் முருகன் பொறுப்பேற்றவுடன் மாற்றுக் கட்சியில் இருந்தும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளும் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேலும் திரை நட்சத்திரங்களும் பாஜகவில் அதிக அளவில் இணைந்ததால் பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெற்றதாக
 

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு: பெரும் பரபரப்பு

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த நிலையில் அவர் திடீரென தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் பொறுப்பேற்றவுடன் மாற்றுக் கட்சியில் இருந்தும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளும் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேலும் திரை நட்சத்திரங்களும் பாஜகவில் அதிக அளவில் இணைந்ததால் பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெற்றதாக கூறப்பட்டது

இந்த நிலையில் திடீரென பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது என்பதும், பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே

அதுமட்டுமின்றி பாஜக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி என்ற அறிவிப்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது திடீரென பாஜக தலைவர் எல்.முருகன் மீது தியாகதுருவம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருக்கும் நிலையில் அந்த தடை உத்தரவையும் மீறி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழா நடத்தியதாகவும், அந்த திறப்பு விழாக்களில் எல்.முருகன் பங்கேற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 250 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web