சென்னையில் இருந்து வெளியேற அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு

ஊரடங்கு காரணமாக சென்னையில் தங்கியிருக்கும் ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே மேலும் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் அவஸ்தைப் பட்டு வரும் பலர் சொந்த ஊருக்கு ஏற்கனவே திரும்பிவிட்டனர். மீதி உள்ளவர்களும் சொந்த ஊர் திரும்ப முயற்சி செய்த நிலையில் இபாஸ் கிடைக்காமல் திண்டாடி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்த நிலையில் சென்னையில் வேலைவாய்ப்பை இழந்து வருமானம் இன்றி இருக்கும் தங்களை சென்னையை விட்டு சொந்த
 
சென்னையில் இருந்து வெளியேற அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு

ஊரடங்கு காரணமாக சென்னையில் தங்கியிருக்கும் ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

மேலும் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் அவஸ்தைப் பட்டு வரும் பலர் சொந்த ஊருக்கு ஏற்கனவே திரும்பிவிட்டனர். மீதி உள்ளவர்களும் சொந்த ஊர் திரும்ப முயற்சி செய்த நிலையில் இபாஸ் கிடைக்காமல் திண்டாடி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் சென்னையில் வேலைவாய்ப்பை இழந்து வருமானம் இன்றி இருக்கும் தங்களை சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்

இந்த வழக்கில் வரும் நவம்பர் மாதம் வரை கொரோனா பாதிப்பு இருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர் இதனை அடுத்து சொந்த ஊர் செல்ல விரும்புவோருக்கு இபாஸ் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இந்த மனு குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு சீராக இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுவதால் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web