சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டா? மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் நிலையில் தற்போது அவருடைய வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இன்று மதியம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு திடீரென வந்த ஒரு மர்ம அழைப்பில் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து சுறுசுறுப்பான போலீசார் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துக்கொண்டு ரஜினியின் போயஸ் வீட்டுக்கு சென்று
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டா? மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் நிலையில் தற்போது அவருடைய வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று மதியம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு திடீரென வந்த ஒரு மர்ம அழைப்பில் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து சுறுசுறுப்பான போலீசார் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துக்கொண்டு ரஜினியின் போயஸ் வீட்டுக்கு சென்று அவரது வீட்டை முழுவதுமாக சோதனை செய்தனர்

இதனை அடுத்து சில மணி நேர சோதனைக்குப் பின் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மர்ம அழைப்பு வதந்தி என்பது முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு விடுத்த நபர் எங்கிருந்து தொலைபேசியில் பேசினார் என்பது குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளிவந்திருக்கும் வதந்தியால் ரஜினி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web