முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1924 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி பிறந்தார். 1969 ஆம் ஆண்டு முதல்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற இவர் தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்துள்ளார். பதவி வகித்தபோது, தமிழக மக்களுக்கு செய்த சேவைகள் அளப்பரியவை. இவர் தமிழகத்தில் கொண்டுவந்த திட்டங்களில் மிக முக்கியமானது ஏழை மக்களுக்கான மருத்துவக் காப்பீடு, பஸ் பாஸ் போன்றவைகள்தான். இவர் அரசியலைத் தாண்டி ஒரு நாத்திகவாதியாக மக்களிடையே உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது
 
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1924 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி பிறந்தார். 1969 ஆம் ஆண்டு முதல்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற இவர் தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்துள்ளார். பதவி வகித்தபோது, தமிழக மக்களுக்கு செய்த சேவைகள் அளப்பரியவை.

இவர் தமிழகத்தில் கொண்டுவந்த திட்டங்களில் மிக முக்கியமானது ஏழை மக்களுக்கான மருத்துவக் காப்பீடு, பஸ் பாஸ் போன்றவைகள்தான். இவர் அரசியலைத் தாண்டி ஒரு நாத்திகவாதியாக மக்களிடையே உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது என்று கருதி போராடியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!!

மேலும் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுதல் என ஏறக்குறைய 80 படங்களுக்கு எழுதியுள்ளார். அதைத் தவிர்த்து நாடகங்கள், வரலாற்றுப் புனைவுகள், புதினங்கள், சிறுகதைத் தொகுதிகள், சிறுகதைகளின் பட்டியல், கவிதைத் தொகுதிகள், உரை நூல்கள், இலக்கிய மறுபடைப்புகள், தன் வரலாறு, சொற்பொழிவுகள், கட்டுரைகள், சிறு குறிப்புகள், பயணக் கட்டுரைகள், கடிதங்கள் என அவர் தமிழ்ப் பற்றாளராகவும் விளங்கினார்.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உயிர் இழந்த இவரது 97ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தொண்டர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

From around the web