97% கணக்குகள் நீக்கம்: டுவிட்டர் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

 

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் பதிவு செய்து வருபவர்களின் கணக்குகளை நீக்க வேண்டுமென மத்திய அரசை டுவிட்டருக்கு வேண்டுகோள் விடுத்தது 

இருப்பினும் டுவிட்டர் நிர்வாகம் ஒரு சில கணக்குகளை மட்டும் நீக்கிவிட்டு மற்ற கணக்குகளை நீக்காமல் இருந்ததால் மத்திய அரசு இதுகுறித்து டுவிட்டர் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது

twitter

அதுமட்டுமின்றி டுவிட்டருக்கு மாற்றாக ’கூ’ என்ற செயலியையும் மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதனால் ஏராளமானோர் டுவிட்டரில் இருந்து வெளியேறி ’கூ’ செயலிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அதிரடியாக விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த 97 சதவீத டுவிட்டர் கணக்குகளை முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

சர்ச்சைக்குரிய பதிவுகளையும் டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டுவிட்டர் நிறுவன பிரதிநிதிகள் நடத்திய ஆலோசனையை தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கையை டுவிட்டர் நிறுவனம் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் எச்சரிக்கைக்கு பணிந்து டுவிட்டர் நிர்வாகம் 97% சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கியதோடு கணக்குகளையும் முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web