திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து காதலனுடன் ஓடிய இளம்பெண்: ’96’ படத்தின் பாதிப்பா?

விஜய்சேதுபதி நடித்த ’96’ திரைப்படம் வெளியானதில் இருந்து பலருக்கு தங்களது பள்ளி, கல்லூரி காதல் ஞாபகம் வந்துள்ளது. இந்த நிலையில் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன இளம்பெண் ஒருவர் தனது கல்லூரி காதலனுடன் ஓடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த ஒரு இளபெண்ணுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான ஒருசில நாட்களில் அந்த பெண்ணின் கணவர் சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள்
 

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து காதலனுடன் ஓடிய இளம்பெண்: ’96’ படத்தின் பாதிப்பா?

விஜய்சேதுபதி நடித்த ’96’ திரைப்படம் வெளியானதில் இருந்து பலருக்கு தங்களது பள்ளி, கல்லூரி காதல் ஞாபகம் வந்துள்ளது. இந்த நிலையில் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன இளம்பெண் ஒருவர் தனது கல்லூரி காதலனுடன் ஓடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த ஒரு இளபெண்ணுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான ஒருசில நாட்களில் அந்த பெண்ணின் கணவர் சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது, தனது மனைவியை சவுதிக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்த அந்த பெண்ணின் கணவர், விமான டிக்கெட்டையும் அனுப்பியுள்ளார். ஆனால் திடீரென இளம்பெண் தனது கல்லூரி கால காதலனுடன் ஓடிப்போய்விட்டதாக தெரியவரவே கணவரின் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர் விரும்பியவருடன் வாழ அந்த பெண்ணுக்கு உரிமை உண்டு என கூறி இருதரப்பு பெற்றோர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web