9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைகிறதா? புதிய தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாததால் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தை 30 % குறைப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘உலகமே கொரோனாவால் அசாதாரண சூழலில் இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் 9ம் வகுப்பு முதல் 12ம்
 

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைகிறதா? புதிய தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாததால் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தை 30 % குறைப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘உலகமே கொரோனாவால் அசாதாரண சூழலில் இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை குறைக்க சிபிஎஸ்இக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து நாடு முழுவதிலும் உள்ள கல்வியாளர்களிடம் கருத்துகளை கேட்டிருந்ததாகவும், 1,500 கல்வியாளர்கள் பாடத்திட்டம் குறைப்பு குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடுத்து மாநில அரசுகளும் பாடத்திட்டத்தை குறைப்பது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

From around the web