88936 வாக்குச்சாவடிகள்! 10813 பதற்றமான வாக்குச்சாவடிகள்! 537 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள்!

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 936 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளையதினம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்காக மின்னணு வாக்கு இயந்திரங்கள் அந்தப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் அதிகாரிகள் தங்களது வேலைகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 234 தொகுதிகளில் மொத்தம் 88936 வாக்குசாவடிகள் உள்ளன.vote

இந்த 88936 வாக்குசாவடிகளில் 10813 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும் 537 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இதனால் இந்தப் பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 45,000 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டு இன்டர்நெட் மூலம் நேரடியாக கண்டறியப்படுகிறது.

இந்த 234 தொகுதிகளிலும் 3585 ஆண்கள் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மேலும் 411 பெண்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.திருநங்கைகள் 3998 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்கள் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெறும் உள்ளது.

From around the web