தமிழகத்திலும் சென்னையிலும் அதிகபட்ச கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக 800க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது என்பதும், அதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 600க்கும் மேல் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 874பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20246 என உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது சென்னையில் இன்று
 
தமிழகத்திலும் சென்னையிலும் அதிகபட்ச கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக 800க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது என்பதும், அதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 600க்கும் மேல் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 874பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20246 என உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் இன்று மட்டும் 618 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13362ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 154 பேர் பலியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று 765 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 11313 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 11,334 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4,66,550 பேர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்திலும் சென்னையிலும் அதிகபட்ச கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

From around the web