24 மணி நேரத்தில் இந்தியாவில் 8000 ஐ தாண்டிய கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்திய நிலையில், இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய அளவில் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் மூன்றாம் நிலையினை எட்டியுள்ளது. அதாவது இந்தியாவில் புதிய உச்சமாக, கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது 24 மணி நேரத்தில் 8000 ஐ நெருங்கி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்திய மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் 1,82,143 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒருநாள் மட்டும் 8,380
 
24 மணி நேரத்தில் இந்தியாவில் 8000 ஐ தாண்டிய கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்திய நிலையில், இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய அளவில் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் மூன்றாம் நிலையினை எட்டியுள்ளது.

அதாவது இந்தியாவில் புதிய உச்சமாக, கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது 24 மணி நேரத்தில் 8000 ஐ நெருங்கி அதிர்ச்சி அளித்துள்ளது.

24 மணி நேரத்தில் இந்தியாவில் 8000 ஐ தாண்டிய கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை!!

இந்திய மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் 1,82,143  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒருநாள் மட்டும் 8,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 193 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்றையநாள் கணக்கெடுப்பின்படி கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,164  ஆக உள்ளது. மேலும் 8,380 என்ற இந்த பாதிப்பானது இதுவரை வெளியான உச்சபட்ச பாதிப்பினைவிட மிக அதிகம் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்தாலும், மற்றொருபுறம் ஊரடங்கானது முக்கிய நகரங்களைத் தவிர்த்து தளர்த்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தினாலும், கொரோனா சிகிச்சையில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

From around the web